நாடாளுமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த மாதம் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இந்திய அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது மாநிலக் கட்சிகளும் தீயாக வேலை செய்து வருகின்றன. இந்த தேர்தல் களத்தில் முக்கியமானதாகக் கருதப்படுவது ராஜஸ்தான். ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானதொரு களமாகவே கருதப்படுகிறது. அதனால் சற்று கூடுதல் கவனம் ராஜஸ்தான் மீது காங்கிரஸ்-க்கும், பா.ஜ.க-வுக்கு இருக்கிறது.
இந்த நிலையில், ராஜஸ்தானின் பா.ஜ.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வசுந்தரா ராஜே தான் அரசியலிருந்து ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜாலவாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வசுந்தரா ராஜே-வும், ஜாலவார்-பரனைப் எம்.பி-யான அவரது மகன் துஷ்யந்த் சிங்கும் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது வசுந்தரா ராஜே, “நீங்கள் அனைவரும் என் மகனை நன்றாகப் பயிற்றுவித்திருக்கிறீர்கள். இந்தக் கூட்டத்தில் என் மகனின் பேச்சைக் கேட்ட பிறகு, நான் ஓய்வு பெற வேண்டும் என நினைக்கிறேன்.
எல்லா எம்.எல்.ஏ-க்களும் இங்கே இருக்கிறார்கள், மக்களுக்கான பணிகளை அவர்கள் சிறப்பாகச் செய்வார்கள் என்பதால், அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நான் உணர்கிறேன். சாலைகள், நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் விமானம் மற்றும் ரயில் இணைப்பு ஆகியவற்றில் ஜாலவார் குறிப்பிடதக்க வளர்ச்சி பெற்றிருக்கிறது. இன்று, மக்கள் இங்கு முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஜாலவார் எங்கே இருக்கிறது எனக் கேட்கிறார்கள்.
பா.ஜ.க-வை முன்னோக்கிக் கொண்டு செல்ல மக்கள் உழைக்கும் போதுதான் ராஜஸ்தான் மீண்டும் முதலிடத்தைப் பெறும். அரசு ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிவு சம்பவங்கள் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்னைகளில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செயலற்று நிற்கிறது. எனது மகனும் இப்போது அரசியலில் பலமாக இயங்கி வருவதால், நான் ஓய்வு பெற தயாராக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com