எம்.பி தேர்தலில் அமோக வெற்றியும், கட்சியில் வளர்ச்சியும்:
நட்சத்திர வேட்பாளராகக் களம் கண்ட தியா குமாரியை “ஜெய்ப்பூர் மகள், தெருவில் நடக்கும் இளவரசி” எனக் குறிப்பிட்டுத் தேர்தல் களத்தில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதனால், சக போட்டியாளர்களை ஓரம்கட்டிய தியா குமாரி, சுமார் 5.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அன்றிலிருந்து, பா.ஜ.க முகாமில் தியா குமாரியின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, கட்சியின் மாநில செயற்குழுவில் பொதுச் செயலாளராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பத்திரிகையாளர் சந்திப்புக்களில் கடுமையாகப் பேசியும், போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியும் தன்னை முதல்வர் பதவிக்கான தலைவராக தலைமைக்கு அடையாளம் காட்டினார்.


துணை முதல்வர் பதவி:
தியா குமாரியின் இந்த அசுர வளர்ச்சியின் காரணமாக ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு இணையாக, கட்சி வட்டாரங்களில் அவர் ஒரு சிறந்த தலைவராகக் கருதப்பட்டார். இந்த நிலையில்தான் தியா குமாரி முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் கசிந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அதற்கு நேர் எதிரான முதல் முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஜன் லால் சர்மா-வை முதல்வராகவும், தியா குமாரியை இரண்டு துணை முதல்வர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு பேட்டியளித்த தியா குமாரி, “இந்த வாய்ப்பை கொடுத்த பிரதமர் மோடி மற்றும் கட்சித் தலைவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். ராஜஸ்தானை காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் விட்டுச்சென்றுள்ளது. ராஜஸ்தானை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவோம். பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். முதல்வராக பதவியேற்க இருக்கும் பஜன்லால் சர்மா கடினமாக உழைக்கக்கூடிய தலைவர். அவருடன் கட்சியில் பணியாற்றி இருக்கிறேன். இப்போது அவரின் அரசில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது”‘ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com