அதைத் தொடர்ந்து, பா.ஜ.க மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் உள்ளிட்ட பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதற்கிடையில், பா.ஜ.க தலைவர் சந்தீப் தயாம மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,”ஆல்வார் தொகுதி வேட்பாளருக்கான தேர்தல் பிரசாரத்தில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நான் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் என்றுதான் கூறவந்தேன். ஆனால், எப்படியோ தவறுதலாக குருத்வாராக்கள் என மாற்றிக் கூறிவிட்டேன். இது பலரை வருத்தியிருப்பதை அறிந்துகொண்டேன். அதனால் மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.


ஆனாலும், பஞ்சாப் பா.ஜ.க தலைவர் சுனில் ஜாகர், “ராஜஸ்தான் தலைவரின் இந்த மூர்க்கத்தனத்தை, சக குடிமக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக ராஜஸ்தான் தலைவரின் தகுதியற்ற பேச்சை மன்னிக்க முடியாது. அவரது பேச்சால் மக்களுக்கு ஏற்பட்ட காயம் குறித்து மத்திய தலைமைக்குத் தெரிவித்திருக்கிறேன். அவரை கட்சியிலிருந்து உடனே நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். பஞ்சாப் பா.ஜ.க மகளிர் அணித் தலைவி ஜெய் இந்தர் கவுர், சண்டிகர் காவல் நிலையத்தில் சந்தீப் தயாமா மீது புகாரளித்து தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். பஞ்சாப் பா.ஜ.க-வின் தொடர் வற்புறுத்தலினால், ஒழுங்கு நடவடிக்கையாக பா.ஜ.க தலைமை சந்தீப் தயாமாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com