ஆனால் போலீஸார் தடுப்புகளை அகற்ற விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கவுகாத்தி எல்லையில் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “‘இந்த வழித்தடத்தில்தான் பஜ்ரங் தளம், பா.ஜ.க.வின் யாத்திரை சென்றது. ஆனால் எங்களுக்கு தடுப்பை அமைத்து இருக்கின்றனர். நாங்கள் தடுப்புகளை எடுப்போம். ஆனால் சட்டத்தை கையில் எடுக்கமாட்டோம். எங்களை பலவீனமானவர்கள் என்று எண்ணிவிடவேண்டாம். மேகாலயாவில் நான் மாணவர்களுடன் கலந்துரையாடுவதை தடுத்தனர். மாணவர்கள் என்னை சந்திக்க வந்த போது அவர்களை அனுமதிக்கவில்லை.
பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்.க்கு காங்கிரஸ் தொண்டர்கள் பயப்படமாட்டார்கள். அஸ்ஸாமில் அவர்களை தோற்கடிப்போம். அதிகாரிகள் தங்களது பணியை செய்கின்றனர். நாங்கள் உங்களுடன்(போலீஸா) சண்டையிட வரவில்லை. உங்களை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். மிகவும் ஊழல்வாதியான ஹிமந்தாவை எதிர்த்து போராட வந்திருக்கிறோம். அஸ்ஸாம் முதல்வர் யாத்திரைக்கு எதிராக என்ன செய்தாலும் அது யாத்திரைக்கு பயனளிக்கும். முதல்வர் ஹிமந்தா சர்மா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நடவடிக்கையால் எங்களது யாத்திரைக்கு போதுமான விளம்பரம் கிடைத்துள்ளது” என்றார். முன்னதாக ராகுல் காந்தி அஸ்ஸாம் மற்றும் மேகாலயா எல்லையில் வாகனத்தின் மேல் நின்று கொண்டு அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அங்கு மாணவர்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.

இதற்கு ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ள ஹிமந்த சர்மா, ”அஸ்ஸாம் அமைதியான மாநிலம். நக்சலைட்கள் போன்ற இந்த நடவடிக்கையால் அஸ்ஸாம் கலாசாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை தூண்டிவிட்ட ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி மாநில டிஜிபி மற்றும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீங்கள்(காங்கிரஸ்) வெளியிட்டுள்ள வீடியோக்கள் சாட்சியங்களாக பயன்படுத்தப்படும். உங்களது செயல்பாடுகளால் கவுகாத்தி நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்த யாத்திரை வரும் வியாழக்கிழமை வரை அஸ்ஸாமில்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
