அதனால் இதை உடனடியாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டுவாருங்கள். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபிறகே இது நடைமுறைக்கு வரும் என்பது ஏற்கத்தக்கதல்ல. அதேபோல் நாட்டு மக்களுக்கு அதிகாரமளிப்பது என்பது அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும். நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினராக இருப்பவர்கள் ஓ.பி.சி பிரிவினர்.

ஆனால், மத்திய அரசின் நிர்வாகத்தில் 90 செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள். புதிய நாடாளுமன்றம் மிகவும் அருமையாக இருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் நாட்டின் முதல் குடிமகளான பழங்குடி இன பெண் குடியரசுத் தலைவியை பார்க்க முடியவில்லை. அதானி உட்பட பிற பிரச்னைகளில் இருந்து எப்படி மக்களவை திசைதிருப்புவது என்பதை பா.ஜ.க-வினர் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்” எனப் பேசினார்.
நன்றி
Publisher: www.vikatan.com
