செப்டம்பர் 4-ம் தேதி ஜி20 மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலும், பிரதமர், உள்துறை அமைச்சர் அலுவலகங்கள் விரைவாக அனுமதி வழங்கின. ஆனால், புதுவை அதிகாரிகளைப் பற்றி நினைக்கும்போது எனக்கு வருத்தமாக உள்ளது. செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தவறு செய்திருக்கின்றனர். ஏற்கெனவே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கலந்தாய்வை முடிக்காவிட்டால் என்ன நேரிடும் என்ற அனுபவம் உள்ளது. 10 சதவிகித இட ஒதுக்கீடு பெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாக காரணம் சொல்ல முடியாது.
ஆனால், அதைத்தான் புதுவை அதிகாரிகள் காரணமாகச் சொல்கின்றனர். ஒரு வாரத்துக்குள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கு கொள்கை முடிவு எடுத்து, மத்திய உள்துறை அனுமதி அளித்திருக்கிறது. வேறு எந்த கோப்புக்கும் இவ்வளவு விரைவாக அனுமதி கிடைத்திருக்காது. புதுவை பயன் பெற வேண்டும் என்பதற்காக பிரதமர், உள்துறை அமைச்சர் அலுவலகமும் மிக விரைவில் ஒரு வாரத்துக்குள் அனுமதி அளித்தன. அதன் பிறகு கலந்தாய்வை நடத்தி முடிக்க 25 நாள்கள் இருந்தன. கலந்தாய்வை தாமதப்படுத்தி தவறிழைத்த சென்டாக் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
