அது சரி செய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 10% இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் கொடுத்தது. மருத்துவ சேர்க்கைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் அனுமதி கிடைத்தது. மருத்துவ சேர்க்கையில் அதிகாரிகள் தவறு செய்தார்கள். புதுச்சேரியில் காலம் தாழ்ந்து செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெலங்கானாவில் கோரிக்கை வைத்துள்ளேன். மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம் உறுதி தந்துள்ளன. சென்டாக் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அதற்காக கடும் முயற்சி எடுத்துள்ளோம். உச்ச நீதிமன்றம் வரையறை தந்துள்ள சூழலிலும், மத்திய அரசு போராடி பெற்று தருவதாக உறுதி மொழி தந்துள்ளது. காலம் தாழ்ந்து மருத்துவத்தில் அனுமதிக்கப்பட்ட புதுச்சேரி மாணவர்கள் கவலைப்படவேண்டாம். கண்டிப்பாக அவர்களுக்கு உதவி செய்யப்படும். அதிகாரிகள் தவறு இழைத்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவர்கள் தவறு செய்திருக்கக் கூடாது. கண்டிப்பாக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோருடன் அதிகாரிகளுக்கு சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதை களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தலைமைச் செயலரை அழைத்துப் பேசினேன். முதல்வரிடமும் பேசியுள்ளேன். அதிகாரிகள் தாமதம் செய்வது கவலை அளிக்கக்கூடியதாக இருந்தது. முதல்வர், அமைச்சர்களை கலந்து ஆலோசித்து சுமுக செயல்முறையாற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன். தமிழகத்திலும் முதல்வரும், ஆளுநரும் உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம். எப்போதும் சண்டையே போட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தெலங்கானாவிற்கும் இதையேதான் சொல்கிறேன். கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியாது. கருத்து ஒற்றுமை தேவை. தீவிரவாதத்துக்கு எங்கேயும் இடம் கிடையாது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
