அங்கு தடை செய்யப்பட்ட, இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருளான கஞ்சா 3 கிலோ தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு செல்லும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்பட்டுள்ளது. இதைப் போன்றுதான் புதுச்சேரியில் உள்ள அனைத்து ரெஸ்டோ பார்களிலும் தடை செய்யப்பட்ட கஞ்சா, அபின், கொக்கைன் உட்பட போதைப்பொருட்கள் விற்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது என முதலமைச்சர் ரங்கசாமி பெருமை பேசி வருகிறார். உண்மையிலேயே இந்தியாவிலேயே புதுச்சேரி போதைப்பொருள் நடமாட்டத்தில்தான் முதலிடம் வகிக்கிறது. இதற்குத்தான் முதலமைச்சர் ஆசைப்பட்டாரா? இதற்குத்தான் நூற்றுக்கணக்கான ரெஸ்டோ பார்கள் அமைக்க அனுமதியளித்தாரா? கவர்ச்சி நடன பார்களில் போதை பொருட்கள் தடையின்றி விற்கப்படுவது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கூறப்போகிறார் ?
வருமானத்திற்காக எதையும் விற்கலாம் என முதலமைச்சர் அனுமதி அளித்து விட்டாரா? கலாசார சீரழிவு மற்றும் போதையின் பிடியில் சிக்கி, எதிர்காலத்தை தொலைக்கும் இளைஞர்களின் நிலை முதலமைச்சருக்கு முழு சந்தோஷம் அளிக்கிறதா? புதுச்சேரி மாநில மக்கள் இதற்குத்தான் வாக்களித்து ஆட்சி எனும் அரியணையை அளித்தார்களா? புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் முதலமைச்சரை நம்பி வாக்களித்ததை எண்ணி ஒவ்வொரு நாளும் வெட்கித் தலைகுனிய வேண்டிய மனநிலையில் உள்ளனர். இந்த போதை கலாசாரம் புதுச்சேரியின் எதிர்கால நலனுக்கு உகந்தது அல்ல என்பதை முதலமைச்சர் உணர்ந்து கொள்ள வேண்டும். புதுச்சேரியை சுடுகாடாக்கி, மண்டை ஓடுகளின் மீது அரியணை அமைக்க வேண்டாம் என எச்சரிக்கிறோம். போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுத்து, புதுச்சேரி மாநில இளைய சமுதாயத்தை காப்பாற்றுங்கள், இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்துகிறோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com