சீமை கருவேல மரம் அகற்றம்… அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில், ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், `தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும், மண்வளமும் பாதுகாக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சீமைக் கருவேல மரம்சீமைக் கருவேல மரம்

சீமைக் கருவேல மரம்
நா.ராஜமுருகன்

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களால் விளையக்கூடிய ஆபத்துகளை உணர்ந்து, தமிழகம் முழுவதும் அதை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டனர்.

பிறகு, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களுக்குள் சீமைக் கருவேல வழக்கு தொடர்பான, அரசின் நிலையை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *