`துணிச்சலுக்குச் சொந்தக்காரர்; பசிப்பிணி தீர்த்த

`ஓர் அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு, ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது!’ – பிரதமர் மோடி

`திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்தவர். தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த்தின் வாழ்வை, இயற்கை இரக்கமின்றி எடுத்துக் கொண்டிருக்கிறது.’ – முதல்வர் ஸ்டாலின்

`தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் மறைவு, ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. சினிமா மற்றும் அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.’  – ராகுல் காந்தி

`பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செய்தற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.’ – எடப்பாடி பழனிசாமி

`நல்ல திரைப்படக் கலைஞர், நல்ல அரசியல் தலைவர், நல்ல மனிதர், நல்ல சகோதரர். ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்திருக்கிறோம்.’ – தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

`மாபெரும் கலைஞன், மக்கள் நாயகன், தங்க மனம்கொண்ட மனிதரான ‘கேப்டன்’ விஜயகாந்த் என்றென்றும் மரியாதையுடனும், போற்றுதலுடனும் நினைவுகூரப்படுவார்.’ – காங்கிரஸ் தலைவர் பிரியாங்கா காந்தி

`கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் ஜி, திரை மற்றும் திரைக்கு வெளியே தனது செயல்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியைத் தூண்டினார்.’ – மத்திய அமைச்சர் அமித் ஷா

ஆர்.என்.ரவி

`சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமானவர் விஜயகாந்த். சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

`தம் நண்பர்கள் பலரின் திரைத்துறை வளர்ச்சிக்குக் காரணமாகத் திகழ்ந்த பெருந்தகை. தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக் கூடாது என்று தம்மை நாடி வந்த மக்களை நேசித்தவர்.’ – சீமான்

உதயநிதி ஸ்டாலின்

`சிறந்த மனிதநேயர் – துணிச்சலுக்குச் சொந்தக்காரர் – தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர். நடிகர் சங்கத் தலைவராகவும் – எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்படச் செயல்பட்ட கேப்டனின் இழப்பு பேரிழப்பாகும்.’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஜே.பி.நட்டா

`திரைப்படத் தயாரிப்பிலும் பொதுச் சேவையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான அவரது நேர்மையான அர்ப்பணிப்புக்காக, அவர் நினைவுகூரப்படுவார்.’ – பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா

ஜெயக்குமார்

`இதயத்தின் உள்ளே இடி ஒன்று பாய்ந்ததுபோல‌ உள்ளது. அண்ணன் கேப்டன் அவர்களோடு நெருங்கிய பழகியவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், அவர் பேரன்பின் பெரும் மனிதன் என்று’! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

`தமிழ்த்திரையுலகிலும், அரசியலிலும் தமக்கென தவிர்க்க முடியாத இடத்தை வென்றெடுத்தவர் விஜயகாந்த். அரசியலைக் கடந்து அவர்மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு.’ – பா.ம.க தலைவர் ராமதாஸ்

`ஏழை எளிய மக்களுக்கு உதவும் கொடை உள்ளம் படைத்தவர். தமிழ் மொழி, இன உணர்வுடன் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் ஆதரவு வழங்கினார்.’ – ம.தி.மு.க தலைவர் வைகோ

`எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரின் மறைவு, தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும்.’ – தி.மு.க எம்.பி கனிமொழி

ஓபிஎஸ்

`தனியாக ஒரு கட்சியைத் துவக்கி, சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்த பெருமை இவருக்கு உண்டு. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் விஜயகாந்த்.’ – ஓ.பன்னீர்செல்வம்

அழகிரி

`தமிழ் திரையுலகில் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற பெரும் கலைஞராக திகழ்ந்தார். அதேபோல, அரசியலில் கால் பதித்து புதிய பாதையில் பயணித்து, தனக்கென தனி வாக்கு வங்கியைத் திரட்டி, பல அரசியல் மாற்றங்களுக்குக் கருவியாகத் திகழ்ந்தவர்.’ – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

“தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களுக்கு, ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம்.” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

`பழகுவதற்கு இனியரும், பண்பாளரும், தேடிவந்த பொருளையெல்லாம் வாரிவழங்கிய கொடை உள்ளம் கொண்டவருமாக வாழ்ந்த மனித நேயர் விஜயகாந்த் அவர்களின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு.’ – முன்னாள் அமைச்சர் பீட்டர் அல்போன்ஸ்

`தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர்.’ – மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்

`சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து, தன் புரட்சிகரமான கருத்துகள் மூலம் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த விஜயகாந்த் அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு.’ – டி.டி.வி.தினகரன்

நாஞ்சில் சம்பத்

`விளிம்புநிலை மக்களின் அன்புக்கு பாத்திரமானவர்! ஈகைக் குணம் நிறம்பப் பெற்றவர்! சாமானியர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு வடிவம்தர தே.மு.தி.க-வை நிர்மானித்தவர்!’ – நாஞ்சில் சம்பத்

திருமாவளவன்

“விஜய்காந்த் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு, மிகுந்த துயருற்றேன். அவரின் மறைவு தமிழ் சினிமாவுக்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு.” – வி.சி.க தலைவர் திருமாவளவன்

அண்ணாமலை

“கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரின் இன்னுயிர் நம்மைவிட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.” – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

குஷ்பூ

“ஒரு ரத்தினத்தை இழந்துவிட்டோம். தங்க இதயம் கொண்ட நல்ல மனிதர். எங்கள் அன்புக்குரிய கேப்டன், இனி நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.” – நடிகை குஷ்பு

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *