ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தற்போது ஐந்து மாநில தேர்தல் நடந்து வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதோடு அதானியுடன் பிரதமர் நரேந்திர மோடி இருப்பது போன்ற போட்டோவும் வெளியானது. வீடியோவில் அதானியின் கட்டளைக்கு அடிபணிந்து பிரதமர் மோடி செயல்படுவது போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தது.
அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை தொடர்ந்து பா.ஜ.க.தலைவர்கள் தேர்தல் கமிஷனை சந்தித்து ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக புகார் கொடுத்தனர். அதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத நெறிமுறையற்ற வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருப்பதாக குற்றம் சாட்டினர். அவர்களின் புகாரை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸிற்கு பதிலளிக்கவில்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று பிரியங்கா காந்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மத்திய பிரதேச தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசியதாக பா.ஜ.க. குற்றம் சாட்டி இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கியது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக ஆதாரமற்ற தவறான தகவல்களை பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்ததாக தேர்தல் கமிஷனில் பா.ஜ.க. குற்றம் சாட்டி இருக்கிறது.
அதன் அடிப்படையில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷன் பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்த நோட்டீஸிற்கு நாளை மாலை 8 மணிக்குள் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
