PM Kissan: விவசாய கடன் அட்டை பெற சிறப்பு முகாம்…! மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு…!

PM Kissan: விவசாய கடன் அட்டை பெற சிறப்பு முகாம்…! மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு…!

வேளாண்மைத்துறை மூலம் பிரதம மந்திரி கிஷான் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து பயனாளிகளும் விவசாய கடன் அட்டை (Kisan Credit Card) பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; பாரத பிரதமரின் Ghar Ghar KCC Abhiyan – திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் 31.12.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு நடத்தப்படவுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கடன் சங்க அலுவலர்கள் மூலம் மேலும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் விவசாய கடன் அட்டையினை கொண்டு ரூ. 1,60,000/- (ரூபாய் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் மட்டும்) வரை வட்டியில்லா கடன் பெறலாம். இக்கடன் தொகை பெறுவதற்கு எந்தவித அடமானமும் (Collaterals Security) வைக்க தேவையில்லை.

இதுநாள் வரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் மற்றும் பிரதம மந்திரி தங்களது நில உடமை ஆவணங்கள் (சிட்டா, அடங்கல்), வங்கி கணக்கு புத்தக நகல் முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி விவசாய கடன் அட்டையினை (Kisan Credit Card) பெற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *