நாட்டில் அடிக்கடி அரசியல் கட்சிகள் உடைவதும், ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு அரசியல் தலைவர்கள் சேர்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த ஓராண்டில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உடைந்திருக்கின்றன. இதில் சிவசேனா இரு அணிகளாக உடைந்து, அதன் தலைவர்கள் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். இது தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் தலைமையில் பிரிந்திருக்கிறது. அஜித் பவார் அணிக்கு இன்னும் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கொடுக்கவில்லை. சரத் பவாரும், அஜித் பவாரும் தங்களது அணியை உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அறிவிக்கவேண்டும் என்று கோரி, தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருக்கின்றனர். பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் உடைந்திருக்கின்றன. அரசியல் கட்சிகள் உடையவும், அவற்றின் தலைவர்கள், நிர்வாகிகள் வேறு கட்சியில் சேர்வதற்கும், அரசியலமைப்புச் சட்டத்தில் இடமிருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது பிரிவின், 4-வது பத்தியில் இது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது பிரிவில் அரசியல் கட்சிகளில் பிளவு ஏற்படவும், அவற்றில் இருப்பவர்கள் அணி மாறவும் வழங்கப்பட்டிருக்கும் அனுமதிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று, பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. `வனசக்தி” என்ற அமைப்பின் தலைவரான மீனாட்சி மேனன் என்பவர், தனது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசியல் தலைவர்கள் மொத்தமாக கட்சியிலிருந்து வெளியேறி கட்சிகளை உடைக்கின்றனர். இதனால் மீண்டும் தேர்தல் நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
