Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
சென்னை அம்பத்தூரில் ஏசி இயந்திரத்தில் தீப்பிடித்து தாய், மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூரை அடுத்த மேனாம்பேடு இந்திரா நகரை சேர்ந்தவர் ஹாலினா (50). இவருடைய மகள் நஸ்ரியா (16). இவர்கள் இருவரும் நேற்றிரவு ஏசி போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுடைய வீட்டிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது படுக்கை அறையில் ஹாலினாவும் நஸ்ரியாவும் தீயில் கருகி இறந்து கிடந்தனர்.
இதையடுத்து, இருவரது உடல்களையும் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஏசி இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாகவும் அவர்கள் இருவரும் புகை காரணமாக மூச்சுத்திணறலால் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மக்களே உஷார்..!! ஏசியில் தீப்பிடித்து விபத்து..!! தாய், மகள் பலியான சோகம்..!! அம்பத்தூரில் அதிர்ச்சி..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
