உணர்ச்சிமிக்க இதழ்கள்!… போதையை போல அடிமையாக்கும் முத்தம்!… அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

உணர்ச்சிமிக்க இதழ்கள்!… போதையை போல அடிமையாக்கும் முத்தம்!… அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

முத்தம் பற்றி நீங்கள் அறிந்திராத சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முத்தம் என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை உடலுறவுக்கு ஒரு படி மேலேயே எடுத்துக் கொள்ளலாம். பின்ன என்ன முத்தமிடுவதால் கர்ப்பம் ஆக முடியாது அல்லவா! ஆனால் முத்தமிடுவதால் STD நோய்கள் வரக்கூடும். அதனால் கவனமாக இருங்கள். உங்கள் உதட்டிலோ அல்லது வாயிலோ வெட்டுக் காயம் அல்லது புண் ஏதேனும் இருந்தால் பாலியல் நோய்கள் பரவலாம்.

எப்படி முத்தமிடுவது என இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? யோசனை வேண்டாம், செயலில் இறங்குங்கள்! இதில் பலவித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இது உங்கள் பற்களுக்கு நல்லதாகும். மேலும் உங்கள் துணைக்கு இருக்கும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் நீங்கும். முக்கியமாக உங்களை இளமையுடன் காண வைக்கும்.

முத்தமிடுவது என்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்; அதே சமயம் அது ஒரு மணிநேரத்திற்கு 1500 கலோரிகளை எரிக்கும். முத்தமிடும் வழிகளைப் பற்றி பேசுகையில், ஃபிரெஞ்ச் கிஸ் முகத்தில் உள்ள 34 தசைகளை செயல்பட வைக்கும். அதனால் முகத்திற்கு இது சிறந்த உடற்பயிற்சியாக விளங்குகிறது.

முத்தத்தைப் பற்றிய மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல் – அது ஒரு போதை மருந்தை போல் செயல்படும்! முத்தமிடும் போது வெளிப்படும் என்டார்பின்கள், மார்ஃபைன் மருந்தின் அளவை காட்டிலும் சக்தி வாய்ந்த தாக்கத்தை கொண்டிருக்கும். முத்தமிடுவது பழக்கம் நம்மை அதற்கு அடிமையாக்கும். ஆனால் இதற்கு அடிமையாவதைப் பற்றி யாரும் எதுவும் சொல்வதில்லை; சட்டப்படியும் அதனை செய்யலாம்.

நாம் ஏன் முத்தமிடுகிறோம் என்ற காரணம் தெரியவில்லை என்றாலும் கூட, நம்மை முத்தமிட தூண்டும் அறிவியலை ஃபில்லேமாட்டோலஜி என அழைக்கின்றனர். இதற்கிடையில் முத்தமிட ஏற்படும் பயத்தை ஃபில்லேமாஃபோபியா என அழைக்கின்றனர். பாலியல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் பிற காரணங்களால் இந்த பயம் ஏற்படலாம்.

உதடுகளில் எண்ண முடியாத அளவில் நரம்பு முடிவுகள் உள்ளது. உங்கள் துணையை நீங்கள் முத்தமிடும் போது எழும் உடனடி தூண்டுதலுக்கு இதுவே காரணம். கண்டிப்பாக இது உங்களுக்கு தெரிந்திருக்காது. உங்கள் துணையை முத்தமிடுவதற்கு முன்பு பற்களை நன்றாக துலக்கி விடுங்கள். அதற்கு காரணம் உங்கள் வாயில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்கும்.

குறிப்பாக ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை – உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் போது ஆண்கள் தங்களிடம் இருந்து டெஸ்டோஸ்டிரோனை அனுப்புவார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஆண்களின் எச்சிலில் தான் டெஸ்டோஸ்டிரோன் இருக்கும். பெண்களின் வாயில் இருக்கும் சீத சவ்வுகள் டெஸ்டோஸ்டிரோனை உறிஞ்சிடும். இதனால் உடலுறவு கொள்ளும் வாய்ப்புகளும், இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்புகளும் அதிகமாகும்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *