திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் விடுதியில், இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறறது. இந்த கூட்டத்தில் 15 -க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு, கட்சி நிலைபாடு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது, ,கூட்டணி என்று பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஐ.ஜே.கே கட்சியின் தலைவரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்திய ஜனநாயக கட்சி ஒரு தேசிய கட்சி. இந்த கட்சி மற்றுமொரு தேசிய கட்சியான பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் ஐ.ஜே.கே களமிறங்கவுள்ளது. இதில், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். அவர்களும் அந்த மூன்று தொகுதிகளையும் எங்களுக்கு ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளதால் அவற்றில் போட்டியிட வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் எங்களை கூட்டணிக்கு வருமாறு அ.தி.மு.க உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் எங்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
