2 நிமிடத்தில் பான் கார்டில் திருத்தம் செய்யலாம்!… கட்டணம் எவ்வளவு?… முழு விவரம்!

2 நிமிடத்தில் பான் கார்டில் திருத்தம் செய்யலாம்!… கட்டணம் எவ்வளவு?… முழு விவரம்!

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

பான் கார்டில் உள்ள விவரங்களில் பிழை ஏதேனும் இருந்தால் அதனை ஆன்லைன் மூலமாக எளிதில் எப்படி மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தில் ‘Application Type’ -> ‘Changes or Correction in Existing PAN card’ என்பதைத் தேர்வு செய்யவேண்டும். பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்தப் பக்கத்தில் பூர்த்தி செய்த உடன் அளிக்கப்படும் டோக்கன் எண்ணை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த டோக்கன் எண் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும். எனவே சரியான மின்னஞ்சல் முகவரியை அளிக்க வேண்டும். தற்போது பான் கார்டு பெயர் ஆதார் கார்டில் உள்ளது போன்று தான் அளிக்கப்படுகிறது. எனவே ஆதார் கார்டு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் திருத்தம் செய்ய வேண்டிய விவரங்களை எல்லாம் அளித்த பிறகு, அடையாள மற்றும் முகவரி ஆவணங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். இந்தப் படிகளை எல்லாம் முடித்த பிறகு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து 110 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தினால் பான் கார்டு திருத்தம் செய்யப்பட்டு உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். இதுவே வெளிநாட்டு முகவரி என்றால் 1,020 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

The post 2 நிமிடத்தில் பான் கார்டில் திருத்தம் செய்யலாம்!… கட்டணம் எவ்வளவு?… முழு விவரம்! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *