
விஜய் டிவி நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது. அதில் சீரியலும் ஒன்று. அப்படி அனைவரும் பார்க்கும் வகையில் குடும்ப கதையாக “பாக்கியலட்சுமி” சீரியலை ஒளிப்பரப்பி வருகிறது. அதில் விறுவிறுப்பான காட்சிகள் நடந்து வருகிறது.
அதாவது தற்போது அமிர்தாவின் கணவர் உயிருடன் திரும்ப வருகிறார். அவர் அமிர்தாவுடன் வாழ நினைப்பதால், எழிலை விட்டு அமிர்தா பிரிய முடிவு செய்வதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் எழில், அமிர்தாவின் முதல் கணவர் இறந்துவிட்டதால் அமிர்தாவை விரும்பி திருமணம் செய்து கொள்கிறார். அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையை தொடங்கி விட்டனர். இந்த நிலையில் அமிர்தாவின் முதல் கணவர் திரும்ப உயிருடன் வருகிறார். எழில், அமிர்தா வாழ்கையில் அவர் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்.
இந்த நிலையில், கணேஷ் அமிர்தாவுடன் வாழ நினைப்பதால் தன்னுடன் வாழ வரும்படி அமிர்தாவை கணேஷ் அழைக்கிறார். அமிர்தா அவருக்கு மறுப்பு தெரிவிப்பார் என குடும்பத்தில் உள்ள அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆனால் எதிர்பாரத விதமாக அமிர்தா எழிலை பிரிய முடிவு எடுக்கிறார். இதனால் எழில் உட்பட குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. தனது மகனின் வாழ்க்கையை நினைத்து பாக்கியா கஷ்டத்தில் இருக்க, அதையே சாக்காக எடுத்துக்கொண்ட கோபி, பாக்கியாவை அவமானப்படுத்துகிறார். இவை அனைத்தும் இனி வரும் எபிசோடுகளில் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நன்றி
Publisher: jobstamil.in