அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கோவை சூலூரில் `அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” என்ற பெயரில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், கோவையில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “பிரதமர் மோடி திருச்சி வந்தபோது, மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வாய்ப்பு கேட்டிருந்தேன். வரவேற்பதற்கு மட்டும் வாய்ப்பு தந்தார்கள். மகிழ்வோடு அதை ஏற்றுக்கொண்டேன். இது அரசியல்ரீதியிலான சந்திப்பு இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது டெல்லி செல்வேன். அவரிடம் கொடுக்கப்பட்ட கடிதம் வாழ்த்து கடிதம் மட்டுமே. 10 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
