“அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபித்தால் எல்லோரும் பணிந்து போவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிருபித்தார்கள்… எல்லோரும் பணிந்தார்கள். ஓ.பி.எஸ் வெற்றி பெறவில்லை என்றாலும், தோற்கடிக்கவாது செயல்பட வேண்டும். இன்னும் அவர் பாஜக காப்பாற்றும் என்கிற நம்பிக்கையில் ஓடி கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கட்சியாக உடைத்து அவர்கள் வர வேண்டும் என்றுதான் பாஜக நினைப்பார்களே தவிர, ஓபிஎஸுக்கு எப்படி உறுதுணையாக நிற்பார்கள். பல மாநிலங்களில் பல உதாரணங்களை பார்த்தும் ஓ.பி.எஸ் இன்னும் பாஜக-வை நம்புவது அவரின் அரசியல் அறியாமை. இப்போது அவருக்கான உடனடி வாய்ப்பு டிடிவி-யுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதுத்தான்” என்றார்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. தொண்டர்களால், பொதுமக்களால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தால் அடிமேல் அடி… கொட்டு மேல் கொட்டு வாங்கியுள்ள ஓ.பி.எஸ் கோஷ்டி, உண்மையான மானமுள்ளவர்களாக இருந்தால் இனி அதிமுக கரை வேட்டியையோ, கொடியையோ, இரட்டை இலை சின்னத்தையோ, அதிமுக சம்பந்தமான வண்ணங்களையோ, புரட்சி தலைவர், புரட்சி தலைவியையோ எங்கும் பயன்படுத்த கூடாது. அப்படி செய்தால் சட்டத்தை மீறிய செயலாகும்” என்று கூறியுள்ளார்.
ஓபிஎஸ் தரப்போ மேல்முறையீடு செல்வோம் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இனி ஓ.பி.எஸுக்கு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் என்ன மாதிரியான வரும்காலம் இருக்க போகிறது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
