இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி 20 மாநாட்டின் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பாரத குடியரசுத் தலைவர் என மத்திய அரசு குறிப்பிட்டதால், நாட்டின் பெயரை பாரதம் என பா.ஜ.க மாற்ற முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

ஆனால் மத்திய பா.ஜ.க-வோ, அரசியல் சாசனமே இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடுகிறது, எனவே பாரதம் என்று அழைப்பதில் தவறில்லை எனக் கூறிவருகிறது. பா.ஜ.க குறிப்பிடுவது போல, அரசியல் சாசனத்தின் பிரிவு 1, `இந்தியா, அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம்’ என்று தான் குறிப்பிடுகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் பிரச்னை எழுப்புவது முட்டாள்தனமான செயல் என அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கரின் பேரனும், முன்னாள் எம்.பி-யுமான பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்திருக்கிறார்.
`இந்தியா Vs பாரதம்’ விவகாரம் தொடர்பாக ஊடகத்திடம் பேசிய பிரகாஷ் அம்பேத்கர், “அரசியல் சாசனத்தின் பிரிவு 1-ஆனது, `இந்தியா, அதாவது பாரதம்’ என்று குறிப்பிடுவதன் மூலம், இந்தியாவும் இருக்கிறது, பாரதமும் இருக்கிறது என்று கூறுகிறது.

எனவே, இந்தியா மற்றும் பாரதம் இரண்டையுமே அரசியல் சாசனம் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இதில் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்புவது முட்டாள்தனம். அரசியல் சாசனப்படி இதில் எந்தத் தவறும் இல்லை. எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையைப் புறக்கணித்திருக்க வேண்டும். இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவதா அல்லது பாரதம் என்ற பெயரைப் பயன்படுத்துவதா என்பது அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தைப் பொறுத்தது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com
