Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
பிக்பாஸ் சீசன் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். தற்போது வரை அனன்யா மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் வெளியேறி உள்ளனர். தற்போது 16 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். அவர்களுக்கு இடையே போட்டிகளும் கடுமையாகி உள்ளது.
இதற்கிடையே, இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கியவர்கள் பற்றிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெரும்பாலானோர் முதலில் குறிப்பிட்டது மாயாவின் பெயரை தான். இதற்கு அடுத்தபடியாக அவருடன் நெருங்கி பழகி வரும் பூர்ணிமாவை டார்கெட் செய்துள்ளனர். குறிப்பாக ரவீனா, அவரிடம் அழகு இருக்குற அளவுக்கு அறிவு இல்லை என கூறி பூர்ணிமாவை நாமினேட் செய்துள்ளார்.
அடுத்ததாக பிரதீப்பின் பெயரும் இந்த நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கி உள்ளது. அதேபோல் ஐஷூ, மணி சந்திரா, விசித்ரா ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர். இந்த வாரமும் மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் நாமினேஷனில் சிக்கி உள்ளதால் அவர்கள் இருவரில் ஒருவர் கண்டிப்பாக எலிமினேட் ஆகிவிடுவார்கள் என நெட்டிசன்கள் தற்போதே யூகிக்க தொடங்கி விட்டனர்.
The post ’அழகு மட்டும் தான்.. அறிவு இல்ல’..!! நாமினேஷனில் சிக்கிய இணை பிரியா ஜோடி..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
