இந்தக் குழு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்தக் குழுவில் இடம்பெற காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மறுத்துவிட்டார். அதற்கான காரணம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “கமிட்டியின் முடிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் விதிமுறைகளுடன் தயாரிக்கப்பட்ட குழுவில் பணியாற்ற மறுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்தக் குழு உருவாக்கம் ஒரு முழுமையான ‘கண்துடைப்பு முறை’.

மேலும், அரசியலமைப்புரீதியாக சந்தேகத்துக்குரியவற்றைத் திணிக்கும் இந்த திடீர் முயற்சி குறித்து அச்சமடைகிறேன். பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், நடைமுறையில் சாத்தியமற்ற மற்றும் அரசியலமைப்புரீதியில் செயல்படுத்த முடியாத இந்தத் திட்டம், அரசின் மறைமுக நோக்கங்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. எனவே, உங்களின் இந்த முயற்சி, நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு மாபெரும் அவமதிப்பு. இந்தச் சூழ்நிலையில், உங்கள் அழைப்பை நிராகரிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
