ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே இந்தி மொழி எனப் பேசியவர்கள் கர்நாடகா விவகாரத்தில் உங்களின் ஒருமைப்பாட்டைச் செயல்படுத்தலாமே! நாட்டு வளங்கள் நாட்டு மக்களுக்கு பொது என்று இருந்தால்தான், இது நாடு. அவரவர் வளங்கள் அவரவருக்கு என்றால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தெருவுக்கு இரண்டு படிப்பகங்கள் திறக்காமல், குடிப்பகங்கள் திறந்தால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி கர்நாடகாவுக்கு எதிராக முதல்வர் ஏன் போராடவில்லை… காரணம் காங்கிரஸுடன் கூட்டணி. தண்ணீர் தராதவர்களுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கலாமே! தேர்தலுக்காகத்தான் காவிரி விவகாரத்தில் தி.மு.க அமைதியாக இருக்கிறது.


தமிழ்நாட்டில் இருக்கும் நடிகர்களும் கர்நாடகர்களாக இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதால், அவரின் இசை வெளியீட்டு விழாவைத் தடுத்திருக்கிறது தி.மு.க” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com