“புனித நகரங்களில் கோயிலை விட உயரமான கட்டடங்களைக் கட்டக்

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். இங்கு இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் கோரக்பூர், வாரணாசி, மதுரா பிருந்தாவன், அயோத்தி போன்ற கோயில்கள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த மத நகரங்களின் புராதன மாண்பைப் பராமரிக்க, கோயில்களின் உயரத்திற்கு மேல் எந்த விதமான கட்டடங்களையும் கட்ட அனுமதிக்க வேண்டாம் என்று வளர்ச்சி அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.

வாரணாசி

இது தொடர்பாக வெளியான தகவலில், “கோரக்பூர், வாரணாசி மற்றும் மதுரா-பிருந்தாவன் போன்ற மத நகரங்களின் பழமையான மாண்பையும், வரலாற்றுச் சாரத்தைப் பராமரிக்க, கோயில்கள் மற்றும் புனித கட்டடங்களின் உயரத்தை விட அதிக உயரமான கட்டடங்களை அனுமதிக்கக்கூடாது. கட்டடம் கட்டுவதற்கான மாஸ்டர் பிளானில் ஒழுங்குமுறையும் இணைக்கப்பட வேண்டும். கோரக்பூர், வாரணாசி மற்றும் மதுரா-பிருந்தாவனின் வளர்ச்சி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ஜி.ஐ.எஸ் அடிப்படையிலான மாஸ்டர் பிளான் 2031-ஐ ஆய்வு செய்து அதன் முக்கியத்துவத்தையும் அதிகாரிகள் உணரவேண்டும்.

போக்குவரத்து மேலாண்மை, அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றைத் திறம்பட மேம்படுத்த வேண்டும். நகரத்தில் மின்சார பேருந்துகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். வழக்கமான எரிபொருள் பேருந்துகளை முடிந்தவரை நகரத்திற்கு வெளியே இயக்கலாம். மல்டிலெவல் பார்க்கிங்கிற்கு பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பாக மாற்றுவதில் வீட்டுவசதித் துறைக்குக் கணிசமான பங்கு இருக்கிறது.

கோரக்பூர் கோயில்

எனவே, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கு அருகில் புதிய நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார இலக்குகளை அடைய முடியும். மேலும் வளர்ச்சி ஆணையத்தை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு வெளியே விரிவுபடுத்த வேண்டும். கோரக்பூர் நகரத்தை ஆற்றல்மிக்க நகரமாக நிலைநிறுத்த வேண்டும்.

கோரக்பூர் மேம்பாட்டுப் பகுதியின் தற்போதைய மக்கள்தொகை சுமார் 14 லட்சம். வரும் 10 ஆண்டுகளில், இந்த மக்கள் தொகை 25 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் 2047-ம் ஆண்டில் இந்த மக்கள் தொகை 50 லட்சமாக அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. கோரக்பூருடன் இணைந்து, பூர்வாஞ்சல் பகுதியும் இணைந்தால் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *