இந்த நிலையில்தான், பீகார் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பா.ஜ.க கூட்டணியுடன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவிருப்பதாகப் பீகார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜனவரி 28-ம் தேதிக்கான தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், “அரசியல் என்பது சாத்தியங்களின் விளையாட்டு, எதுவும் நடக்கலாம்” எனப் பிரதமர் மோடி கூறியதை இங்குப் பொருத்திப்பார்ப்பது சரியாக இருக்கும். காரணம் இன்றே நிதிஷ் குமார் அம்மாநில ஆளுநரை சந்திக்க இருக்கிறாராம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
