கடலுார்: அதிகமாக புகை வெளிப்படும் பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது என, கடலுார் கோவன் நுரையீரல் சிகிச்சை மைய டாக்டர் கலைக்கோவன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியது:
தீபாவளிக்கு, புஸ்வானம், சாட்டை, பாம்பு டேப்லட் உள்ளிட்ட அதிக புகை வெளிப்படும் பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது. சரவெடிகளை காற்றோட்டமான பகுதிகளில் மட்டுமே வெடிக்க வேண்டும்.
மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள், எண்ணெய் பலகாரங்களை அதிகம் சாப்பிடக்கூடாது. இதன் மூலம் ஆஸ்துமா அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
மூச்சுத்திணறல் உள்ளவர்கள் தீபாவளி நாட்களில் வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமாவிற்கு பயன்படுத்தும் வழக்கமான மருந்துகள், இன்ஹேலர்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றினால் தீபாவளி பண்டிகையின் போது, ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னை இருப்பவர்கள் தங்களின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாத்து கொள்ளலாம்.
கடலுார்: அதிகமாக புகை வெளிப்படும் பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது என, கடலுார் கோவன் நுரையீரல் சிகிச்சை மைய டாக்டர் கலைக்கோவன் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியது:தீபாவளிக்கு, புஸ்வானம்,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
