வேப்பூர்: கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் திறக்கப்பட்டதால், வேப்பூர் பகுதி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
அதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு கோமுகி அணியில் இருந்து 9 ஆயிரம் கனஅடியும், மணிமுக்தா அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கோமுகி அணையில் இருந்து வெளியேற்றும் தண்ணீரின் அளவு நேற்று மாலை ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
அணைகள் திறக்கப்பட்டதால் கடலுார் மாவட்டம், வேப்பூர் வழியாக செல்லும் கோமுகி மற்றும் மணிமுக்தா ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இதனால், வேப்பூர் அடுத்த மேமாத்துார் அணைக்கட்டு நேற்று காலை 11 மணிக்கு நிரம்பியது. அணைக்கட்டிற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளது.
இதனால் வேப்பூர் பகுதியில் சேப்பாக்கம், ஐவதுகுடி, நல்லுார், நகர், வண்ணாத்தூர், மேமாத்துார் உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேப்பூர்: கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் திறக்கப்பட்டதால், வேப்பூர் பகுதி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
