9ம் நுாற்றாண்டு சிற்ப துாண் திருக்கோவிலுாரில் கண்டுபிடிப்பு

9th century sculpture found at Thirukovilur    9ம் நுாற்றாண்டு சிற்ப துாண் திருக்கோவிலுாரில் கண்டுபிடிப்பு

திருக்கோவிலுார்,- திருக்கோவிலுார் கபிலர் தொன்மை ஆய்வு மைய களப்பணியில் திருக்கோவிலுார் பிடாரி அம்மன் கோவில் எதிரில் 9ம் நுாற்றாண்டு சிற்ப துாண் கண்டறியப்பட்டது.

கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவர் உதியன், கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், கலியபெருமாள், பேராசிரியர் ஸ்தனிஸ்லாஸ், நுாலகர் அன்பழகன் ஆகியோர் திருக்கோவிலுார் பிடாரியம்மன் கோவிலுக்கு வெளியே இடைக்கால சோழர்களின் தொடக்க கால மன்னர்களின், மூவிலை நெடுவேல், முத்தலை வேல், சூலப்படை என வழங்கும் சூலத் துாண் சிற்பத்தை கண்டறிந்தனர்.

இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறியதாவது;

துாணின் நான்கு பக்கத்திலும் சூலம் செதுக்கப்பட்டுள்ளது. முதல் பக்கத்தில் சூலத்தின் இரண்டு பக்கமும் குத்துவிளக்கு, மேல் பகுதியில் இரண்டு வென்சாமரம், பிறை, குடை இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த மூன்று பக்கங்களிலும் சூலம் அதற்கு மேல் பிறை இடம் பெற்றுள்ளது. இது தமிழக சிற்பக் கலைக்கு துவக்க காலமாக இருக்கலாம். இடைக்கால சோழர்களின் தொடக்க கால மன்னர்கள் காலமான ஒன்பது அல்லது பத்தாம் நுாற்றாண்டை சேர்ந்த துாண் சிற்பங்கள் ஆகும். பிறை சிவனுக்கே உரியதலால் இது சிவ வழிபாட்டிற்கு உரியதாகும்’ என்றனர்.

திருக்கோவிலுார்,- திருக்கோவிலுார் கபிலர் தொன்மை ஆய்வு மைய களப்பணியில் திருக்கோவிலுார் பிடாரி அம்மன் கோவில் எதிரில் 9ம் நுாற்றாண்டு சிற்ப துாண் கண்டறியப்பட்டது.கபிலர் தொன்மை ஆய்வு


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.
-->