கடலுார்,-கடலுாரில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியின் அனைத்து வகை ராட்டினங்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.
கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் லண்டன் தெரு என்ற பெயரில் பொருட்காட்சி கடந்த 23ம் தேதி துவங்கியது. பொருட்காட்சியின் நுழைவு வாயில் கண்ணை கவரும் வகையில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் லண்டன் தெரு வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
பொருட்காட்சியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள், பேன்சி பொருட்கள், பிளாஸ்டிக், ஆடைகள் உட்பட அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. பேய் வீடு, 3-டி ஷோ, ஜெயன்ட் வீல், ரயில், டோரா டோரா, வாட்டர் போட் உட்பட குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி உள்ளிட்ட உணவு ஸ்டால்களும் உள்ளது. பொருட்காட்சி தினமும் மாலை 4:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை நடக்கிறது.
கடலுார்,-கடலுாரில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியின் அனைத்து வகை ராட்டினங்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் லண்டன்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
