விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, இ.எஸ்.ஐ., ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலையங்கள் என அனைத்திலும் மருந்தாளுனர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் நோயாளிகள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்து வாங்க வேண்டியதுள்ளதால் அவதியடைந்து வருகின்றனர்.
விருதுநகரில் கன்னிச்சேரி புதூர், ஆமத்தூர், ஆவுடையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள், காரியாப்பட்டியில் 4, திருச்சுழியில் 3 என மாவட்டம் முழுவதும் 54 மருத்துவ சேவை பிரிவுகள் இயங்குகின்றன.
இவற்றில் மருந்தாளுனர்கள் பற்றாக்குறை 3 ஆண்டுக்கும் மேல் தொடர்வதோடு பணிச்சுமை, மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் மருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. விருதுநகர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தினமும் ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரை வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர்.
இவர்களுக்கு மருந்து, மாத்திரை வழங்க 4 பேர் மட்டுமே உள்ளனர். 4 மருந்தாளுனர்கள் ஸ்டோர் கீப்பிங் பணிக்கு செல்கின்றனர். 13 மருந்தாளுனர் பார்க்க வேண்டிய பணிகளை 8 நபர்கள் பார்ப்பதால் நோயாளிகளுக்கு சேவை குறைபாடு உண்டாகிறது.
இதுபோல் மாவட்டம் முழுவதும் 45க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நோயாளிகள், டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை வாங்க வரிசையில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வர பாண்டியன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மருந்தாளுனர் காலிப்பணிடங்களால் பெரும் பிரச்னை உள்ளது. எம்.ஆர்.பி., மூலம் பணியமர்த்திய மருநதாளுனர்களை நிரந்தரம் செய்வதுடன் காலிப்பணிடங்களை நிரப்ப வேண்டும். மருந்துக் கடைகளில் மருந்தாளுனர் மட்டுமே நோயாளிகளுக்கு மருந்துகளை கொடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும், என்றார்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, இ.எஸ்.ஐ., ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலையங்கள் என அனைத்திலும் மருந்தாளுனர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
