கிள்ளை,-காலாண்டு விடுமுறையையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலாண்டு விடுமுறையையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திற்கு, வருகை தந்தனர்.
காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், மாங்குரோவ் காடுகளை சுற்றிபார்க்க படகில், அனைவரும் ஒரே நேரத்தில் செல்ல முடியாததால், பலர் சுற்றுலா மையத்தில் காத்திருந்து, படகில் சென்று மாங்குரோவ் காடுககளின் இயற்கை அழகை ரசித்து, சென்றனர்.
படகில் செல்ல முடியாதவர்கள் சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி இங்கிருந்தப்படியே, மாங்குரோவ் காடுகளை கண்டுகளித்து சென்றனர்.
கிள்ளை,-காலாண்டு விடுமுறையையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
