k
நகரில் விபத்துகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ெஹல்மெட்அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக செல்வது போன்ற விதிமீறலுக்காக அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது ெஹல்மெட் அணியாமல் இருத்தல், பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாமல் இருத்தல், டூவீலரில் ‘டிரிபிள்ஸ்’ சென்றால் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது.
அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. நகரில்கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டோரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய ஆர்.டி.ஓ.,வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாட்களில் டூவீலரில்பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ெஹல்மெட் அணியாததற்காக 2 நாட்களில் 725 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுஉள்ளன.
போக்குவரத்து துணைகமிஷனர் குமார் கூறுகையில், ”வாகன ஓட்டிகள்நலன்கருதியே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்கூட திருப்பரங்குன்றம் பகுதியில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்தவர் ெஹல்மெட் அணியாததால் விபத்தில் இறந்தார். மக்கள் உயிர் முக்கியம். அதை காப்பது போலீசாரின் கடமை” என்றார்.
k நகரில் விபத்துகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ெஹல்மெட்அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக செல்வது போன்ற
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement