வருண பகவானின் கருணைப்பார்வை கரிசனம் கிடைக்காதா' மழை எதிர்பார்ப்பில் மதுரை விவசாயிகள்

city ​​banner  வருண பகவானின் கருணைப்பார்வை   கரிசனம் கிடைக்காதா'  மழை எதிர்பார்ப்பில் மதுரை விவசாயிகள்

மதுரை,: தென்மேற்கு பருவமழை கைவிட்ட நிலையில் குறுவை பயிரிடாமல் கலங்கிய விவசாயிகள், சம்பா சாகுபடிக்காக வடமேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த மூன்றாண்டுகளாக தொடர் மழை பெய்ததால் மதுரை மாவட்டத்தில் ஜூன் 4 ல் தண்ணீர் திறக்கப்பட்டு ஆண்டுதோறும் 10ஆயிரம் ஏக்கரில் நெல் விளைச்சல் கிடைத்தது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஏமாற்றியது. குறுவைக்கு ஜூன் 4 ல் தண்ணீர் கிடைக்காததால் வெறும் 2500 ஏக்கர் சாகுபடி மட்டுமே நடந்தது. தண்ணீர் திறப்பு குறித்து விவசாயிகளுடன் நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தி ஆக. 30க்கு மேல் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது செப். 6 ஐ கடந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

கைவிரிக்கும் அதிகாரிகள் :

நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டால் ‘முல்லைப்பெரியாறு, வைகை அணை மொத்த இருப்பு 4000 மில்லியன் கனஅடிக்கு மேல் இருந்தால் மட்டுமே தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு சாத்தியம். தற்போது மிகக்குறைந்தளவே நீர் இருப்பு உள்ளதால் குடிநீருக்கு மட்டுமே எடுக்கப்படுகிறது’ என்றனர். இதனால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

முல்லைப்பெரியாறு வைகை பாசன திட்டக்குழு உறுப்பினர் முருகன் கூறியதாவது:

வைகை அணையில் இருந்து பேரணை முதல் கள்ளந்திரி வரையான 45ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இதில் 10 ஆயிரம் ஏக்கரில் கிணற்று பாசனம் நடைபெற வாய்ப்புள்ளதால் சில விவசாயிகள் நடவு, விதைப்பு பணியை துவங்கியுள்ளனர். மற்ற விவசாயிகள் மழையை நம்பி விதைப்பு பணிகளை துவங்க தயக்கம் காட்டுகின்றனர். செப். 15 க்குள் தண்ணீர் திறந்தால் சம்பா சாகுபடி சாத்தியமாகும். அணைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரை மழை பெய்தாலும் தண்ணீர் வடியும் நிலப்பகுதி உள்ளதால் மாற்றுப்பயிர் செய்ய முடியும். உசிலம்பட்டி, செல்லம்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் காய்கறி சாகுபடி செய்யலாம்.

நெல்லுக்கு மாற்று இல்லை:

வாடிப்பட்டி முதல் அலங்காநல்லுார், கள்ளந்திரி வரை களிமண் பூமியாக உள்ளது. நெல்லுக்கு மாற்றாக பிற பயிர்களை சாகுபடி செய்தால் ஒரு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நாற்றுகள் வேரோடு அழுகி விடும். அதனால் நெல்லை விட்டால் வேறு விவசாயம் செய்ய முடியாது. வருணபகவான் எங்கள் மீது கருணை காட்டி மழை பெய்விக்க வேண்டும், என்றார்.

மதுரை,: தென்மேற்கு பருவமழை கைவிட்ட நிலையில் குறுவை பயிரிடாமல் கலங்கிய விவசாயிகள், சம்பா சாகுபடிக்காக வடமேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.கடந்த


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.
-->