மதுரை : அலங்காநல்லுார் அருகே அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீடு தொகை போதாது” என, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் 6 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக வாடிப்பட்டி – சிட்டம்பட்டி 4 வழிச்சாலையில் இருந்து ரோடு அமைக்கப்படுகிறது. இதற்கு தேவையான நிலங்கள் கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி, சின்ன இலந்தைக்குளத்தில் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி நிலங்களை கையகப்படுத்த வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளதற்கு விவசாயிகளிடையே எதிர்ப்பு உள்ளது.
இந்நிலையில் நிலம் இழப்பீடு தொடர்பாக நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் வந்து எதிர்ப்பை தெரிவித்தனர். அதேசமயம் சில விவசாயிகள் ‘இழப்பீடு தொகை குறைவாக உள்ளது. மாற்று இடம் தரவேண்டும்’ என அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதன்மூலம் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இழப்பீடை ஏற்க முடியாது
குட்டிமேய்க்கிப்பட்டி விவசாயி சீனிவாசன்: 250க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 60 ஏக்கருக்கும் மேல் கையகப்படுத்த உள்ளனர். ஒரு சென்டுக்கு ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை தர போவதாக கூறுகின்றனர். தற்போது இங்கு சென்டுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை விலை போகிறது. மாவட்ட நிர்வாகம் கேட்கும் ஆவணங்களை தயார் செய்யவே ரூ.5 ஆயிரம் போதாது. எனவே அவர்கள் கூறும் தொகையை ஏற்க முடியாது. நிலம் தவிர, கிணறு, தென்னை உட்பட மரங்கள் உள்ளன. அவற்றுக்கும் சேர்த்து மதிப்பீடு செய்து தொகை வழங்க வேண்டும், என்றார்.
மதுரை : அலங்காநல்லுார் அருகே அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீடு தொகை போதாது” என, விவசாயிகள் எதிர்ப்பு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement