மதுரை,: மதுரையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் குறித்து ஆசிரியர்களை பி.எட்., மாணவர்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று (செப்.4) துவங்குகிறது. பள்ளிகளுக்குள் வரும் மாணவர் குழுவிற்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பின்போது தொடக்க பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சகஜ நிலை திரும்பியும் இத்திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஐந்தாம் வகுப்பு வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாம் வகுப்பு முதல் நடைமுறையில் உள்ள இத்திட்டம் செயல்பாடு குறித்து பி.எட்., மாணவர்கள் மூலம் மதிப்பீடு செய்யும் கல்வித்துறை உத்தரவுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களிடையே கல்வி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் இன்று முதல் ‘ஆசிரியர்களை சோதிக்கும் மாணவரின் மதிப்பீடும்’ துவங்கவுள்ளது.
மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு, உதவிபெறும் பள்ளிகளில் செப்.15 வரை இந்த மதிப்பீடு நடக்கிறது. இதற்காக 135 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர் குழு பள்ளிக்குள் வந்தால் எதிர்ப்பு தெரிவிக்கவும், ஒத்துழைப்பு அளிப்பதில்லை எனவும் ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சியே நிறைவு செய்யாத மாணவர்களால் ஆசிரியர்களை மதிப்பீடு செய்வது எந்த வகையில் நியாயம். இத்திட்டத்தின் பணிப் பளுவால் ஆசிரியர்கள் ஏற்கெனவே மனஉளைச்சலில் தவிக்கின்றனர். அவர்களை மேலும் காயப்படுத்தும் வகையில் இந்த ‘மாணவர் மதிப்பீடு’ உள்ளது. அனைத்து ஆசிரியர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதல் நாளில் பிரச்னையை தவிர்க்க சங்க நிர்வாகி இல்லாத சில பள்ளிகளில் மட்டும் மதிப்பீடு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவர் மதிப்பீட்டிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம், என்றனர்.
மதுரை,: மதுரையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் குறித்து ஆசிரியர்களை பி.எட்., மாணவர்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று (செப்.4) துவங்குகிறது. பள்ளிகளுக்குள் வரும் மாணவர் குழுவிற்கு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

