மதுரை, ஆக. 30- ‘விவசாய நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை அள்ளுவதற்கு விண்ணப்பித்தோரில் பலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக’ விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட விவசாயிகள் நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை கண்மாய்களில் இருந்து அள்ளலாம் என கலெக்டர் சங்கீதா கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டார். நிலத்தின் அடங்கல் நகல், கணினி சிட்டா உட்பட தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து தாலுகா அலுவலகத்தில் மனுசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த வண்டல் மண் சாகுபடிக்கு தேவையான இயற்கை உரமாக அமையும் என்பதாலும், பல ஆண்டுகளாக இவ்வாய்ப்பை எதிர்நோக்கி இருந்ததாலும் விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டினர்.
மாவட்டத்தில் பேரையூர் தாலுகாவில் அதிகபட்சமாக 150, உசிலம்பட்டியில் 120, மேலுாரில் 100 பேர், மீதி 8 தாலுகாக்களில் இரட்டை இலக்கத்தில் விண்ணப்பம் என, மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இவற்றை தாலுகா அளவில் பரிசீலித்து கனிமவளத்துறை மற்றும் கலெக்டர் அளவிலான அதிகாரிகள் ஒப்புதலுக்கு பின் அனுமதி வழங்கப்பட உள்ளது. இவற்றில் ஆரம்ப கட்டத்திலேயே அதிகளவு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மொத்த மனுக்களில் 185 மனுக்களே ஏற்கப்பட்டுஉள்ளது. மீதியுள்ளவைநிராகரிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் மனுக்களுடன் போதிய ஆவணங்களை இணைக்காததே காரணம். 2 ஆண்டுகளாக தங்கள் நிலங்களில் வண்டல் மண் இடவில்லை என்பதற்கான சான்றிதழை அப்பகுதி வி.ஏ.ஓ.,விடம் (தடையின்மை சான்றாக) பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். அதனை பல விவசாயிகள் கடைபிடிக்கவில்லை. அச்சான்று இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பயனடைந்த விவசாயிகளே மீண்டும் பயன் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக இச்சான்றை கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை, ஆக. 30- ‘விவசாய நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை அள்ளுவதற்கு விண்ணப்பித்தோரில் பலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக’ விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மதுரை மாவட்ட
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

