நத்தம்,–திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள், பஸ்களில் நடத்துனர்கள் என பெரும்பாலானோர் செல்லாது என கூறி வாங்க மறுக்கின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருக்கும் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்களிலும், வியாபாரிகளும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் சார்பில் 2017 ஜூலை ரிசர்வ் வங்கியின் மூலம் 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நாணயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் சாமானிய மக்கள் தங்களிடம் உள்ள 10 ரூபாய் நாணயங்களை சில கடைகள், பஸ்கள், வியாபார நிறுவனங்கள், ஆட்டோக்கள் ,மளிகை கடைகள், பல் பொருள் அங்காடிகளில் அளித்தால் வாங்குவதில்லை. செல்லாது என கூறி வாங்க மறுக்கின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருக்கும் பொதுமக்கள் பாதிப்பதுடன் சில்லறை தட்டுப்பாடும் ஏற்படுகிறது.
அரசால் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி நாணயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களும் வாங்குவதில்லை
நத்தம் சிறுகுடி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறேன். எனது கடைக்கு கிராம மக்கள் கொண்டுவரும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொண்டு பொருட்களை வழங்குகிறேன். ஆனால் பொருட்கள் வாங்கும் நபர்கள் 10 ரூபாய் நாணயம் செல்லாது என கூறி வாங்க மறுக்கின்றனர். இதனால் பல கடைகளில் இதன் பாயணங்கள் வாங்கப்படுதில்லை. இந்த நிலை திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும்தான் உள்ளது. பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு மதுரை மாவட்டத்திற்கு பொருட்களை வாங்க சென்றால் அதை தாராளமாக வாங்குகின்றனர். இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயம் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் செல்லாது என கூறுவது மக்களின் அறியாமை தான் காரணம். எனவே இதன் சர்ச்சைக்கு மாவட்ட நிர்வாகம் மக்களிடமும், வியாபாரிகளிடமும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி நாணயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– ஏ. பெரியசாமி, வியாபாரி, சிறுகுடி நத்தம்.
நத்தம்,–திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வியாபாரிகள், பஸ்களில் நடத்துனர்கள் என பெரும்பாலானோர் செல்லாது என கூறி வாங்க மறுக்கின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயங்களை
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

