கடலுார்-கடலுார், முதுநகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வீடுகள் மற்றும் பொது இடங்களில் சிறியது முதல், பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜை நடைபெறு வது வழக்கம். பின் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், கடலுார் முதுநகர், மணவெளியில் 3 அடி முதல், 15 அடி வரை உயரமுள்ள பல்வேறு விதமான விநா யகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மயில், எலி, சிங்கம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்று சிலைகள் செய்யப்படுகிறது. இதுகுறித்து சிலைகள் தயாரிப்பு கூட உரிமையாளர் குமார் கூறுகையில், ‘இந்தாண்டு விநாயகர் சிலை கேட்டு ஏராளமானோர் முன் பதிவு செய்துள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் கடலுார் மாவட்டம் மட்டுமின்றி, சேலம், திருச்சி என வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தண்ணீரில் எளிதில் கரையும் வகையில் ரசாயனம் இல்லாத கோல மாவு, கிழங்கு மாவு, களிமண் ஆகியவற்றால் சிலைகள் செய்யப்படுகிறது. செப்., 1ம் தேதி முதல், சிலைகளுக்கு வர்ணம் பூசம் பணிகள் துவங்க உள்ளது.
சிலைகளை செய்ய தேவைப்படும் மூலப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் சிலைகளின் விலையும் உயர்ந்துள்ளது’ என்றார்.
கடலுார்-கடலுார், முதுநகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வீடுகள் மற்றும்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

