அங்கித் திவாரி அமலாக்கத்துறையின் பெயரில் பலரையும் மிரட்டி அல்லது அச்சுறுத்தி கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளாரா, அவருடன் மற்ற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கும், குறிப்பாக சென்னையிலுள்ள அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து ஆராய பல்வேறு ஆவணங்களை தேடினார்கள்.
மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அங்கித் திவாரியின் அறையில் டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையிலான மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் 13 மணி நேரம் நடத்திய சோதனை முடிவடைந்தது.


அங்கித் திவாரியின் வங்கி கணக்கு, பண பரிவர்த்தனை விவரங்கள், மெயில் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் குறித்தும், ஆவணங்களில் பதிவிட்டுள்ள தகவல்கள் மற்றும் அங்கித் திவாரி கையாண்ட வழக்குகளுக்கான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த வழக்கில் இன்னும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிடுள்ளதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com