நியூசிலாந்தின் 1853-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான வரலாற்றில் முதன்முறையாக 21 வயது இளம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க். இவர் தன்னை ஓர் அரசியல்வாதியாக நினைக்காமல், மாவோரி மொழி, நிலம் மற்றும் பாரம்பர்ய அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் உள்ள ஒரு பாதுகாவலராகவே அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.
அடக்குமுறைகளைச் சந்தித்த மாவோரி இனத்தைச் சேர்ந்த இவர், மாவோரியின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரம் இது என்று உறுதியாக நம்புகிறார். அதன் நீட்சியாக அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
அந்த வீடியோவில், “என்னுடைய இந்த முதல் உரையை… என் தாத்தா பாட்டிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்… இருப்பினும், இன்று இந்த உரை… எங்கள் எல்லா குழந்தைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முன்பு, என்னிடம் நாடாளுமன்றத்தில் பேசப்படும் விவகாரங்களில் தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என சில அறிவுரைகள் வழங்கப்பட்டன.
New Zealand natives' speech in parliament pic.twitter.com/OkmYNm58Ke
— Enez Özen | Enezator (@Enezator) January 4, 2024
ஆனால், உண்மையில், இந்த அவையில் கூறப்பட்ட அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. அதிலும் அரசியல் இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் வகுப்பறையின் பின்புறத்தில் அமர்ந்திருக்கும் தாமரிக்கி மாவோரி இன மக்களும், வக்காமா, தலைமுறைகள் தங்கள் தாய்மொழியைக் கற்க ஏங்கிக் காத்திருக்கின்றனர்.
இதுவரை தங்கள் வகுப்பறைகளுக்குச் செல்லாத தாமரிக்கி மக்கள் திறந்த மனதுடன் காத்திருக்கிறார்கள். உனக்காக நான் இறப்பேன்… ஆனால் உனக்காக நான் வாழ்வேன்” என உரையாற்றினார்.
இதில் சிறப்பு என்னவென்றால், நியூசிலாந்தின் மௌரி பழங்குடியினரின் ஆதிகால பழக்கங்களில் ஒன்றான ஹக்கா நடனம் மற்றும் பாடலுடன் சேர்ந்து உடலை அசைத்துப் பேசியது நாடாளுமன்றத்தையே அதிரவைத்தது. மேலும், இவரது தாத்தா வயர்மு கட்டேனே 1872-ம் ஆண்டு மாவோரி இனத்தின் முதன் அமைச்சராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com
