கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தில் இடம்பெறும் நடிகர் கமல்ஹாசனின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டன.
தற்போது சித்தார்த் உள்ளிட்டவர்களின் காட்சிகளை மட்டும் ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றி இயக்குநர்களாக உருவெடுத்த சிம்பு தேவன், அறிவழகன், வசந்தன் பாலன் உள்ளிட்டோர் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.
#INDIAN2 pic.twitter.com/rhStm6ISLD
— Shankar Shanmugham (@shankarshanmugh) August 15, 2023
இதையும் படிக்க | அருண் விஜய்யால் நிறுத்தி வைக்கப்பட்ட விஜய் படம்.. இயக்குநர் சொன்ன தகவல்!
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் புகைப்படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் சங்கர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். பல பிரச்னைகள் காரணமாக இந்தியன் 2 திரைப்படம் சுமார் 3 ஆண்டுகளாக தயாராகிவருகிறது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.