“மகா புருஷர் காந்தி, யுகபுருஷர் பிரதமர் மோடி;

1867-ம் ஆண்டு குஜராத்தில் பிறந்து 1901-ம் ஆண்டு இறந்த சமண ஆன்மீகவாதியான ராஜ்சந்திராஜியின் பிறந்தநாள் விழா மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜ்சந்திராஜியின் சுவரோவியத்தை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, “இந்த விழாவில் நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். சென்ற நூற்றாண்டின் மகாபுருஷர் மகாத்மா காந்தி. இந்த நூற்றாண்டின் யுக புருஷர் நரேந்திர மோடி. ஏன் தெரியுமா…

மோடி

மகாத்மா காந்தி சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை போராட்டத்தின் மூலம் ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்தார். இந்தியாவின் வெற்றிகரமான பிரதமர் மோடி, நாம் எப்போதும் வாழ விரும்பும் பாதையில் நம்மை அழைத்துச் செல்கிறார். இந்த இரண்டு பெரிய ஆளுமைகளான தேசத்தந்தை மகாத்மா காந்திக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு விஷயம் பொதுவானது. அவர்கள் இருவரும் ராஜ்சந்திராஜியின் மரியாதையைப் பிரதிபலிப்பவர்கள்.

இந்த தேசத்தின் வளர்ச்சியை எதிர்க்கும் சக்திகள், இந்த நாட்டின் எழுச்சியை ஜீரணிக்காத சக்திகள் தற்போது ஒன்றிணைகின்றன. நாட்டில் எப்பொழுது நல்லது நடக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த நல்லது நடக்கக்கூடாது என அவர்கள் வந்து விடுகிறார்கள். எனவே, ஆபத்து மிகப் பெரியது. இந்தியாவைச் சுற்றி இருக்கும் நாடுகளின் வரலாறுகள் 300 – 500 – 700 ஆண்டுகள் பழமையானவை, அதே சமயம் நமது வரலாறு 5,000 ஆண்டுகள் பழமையானது” எனத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *