இந்திய நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதை குறிக்கோளாக கொண்டு உச்ச நீதிமன்றம் – சென்னை ஐஐடி இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், திறமையான, தொழில்நுட்பரீதியிலான மேம்பட்ட சட்டச் சூழலை உருவாக்குவதோடு, சட்டத்தை எளிதாக அணுகுவதற்கும் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நிகழாண்டு, ஜூலை மாதம் சென்னை ஐஐடி-க்கு வருகை புரிந்தபோது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும், உச்ச நீதிமன்றமும், ஐஐடி மெட்ராஸும் இணைந்து இந்திய நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் செயல்பாட்டின் மூலம், நீதியை நாடி வருபவர்களுக்கான பாதையை எளிமையாக்கும் நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பிரதியெடுக்கும் கருவிகள், பிரதி தொகுப்புகளை வகைப்படுத்துதல், மொழிப்பெயர்ப்பு கருவிகள், நீதிமன்ற விசாரணைகளுக்கான பிரத்யேக தளங்கள், மாதிரி செயல் வடிவங்கள் மற்றும் அவற்றுக்கான சட்ட மொழி மாதிரிகள் போன்றவற்றை செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருகி வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்திய உச்ச நீதிமன்றமும், சென்னை ஐஐடியும் ஒருங்கிணைந்து மேம்பட்ட சட்டச்சூழலை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com