பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில், பெரும்பான்மைச் சமூகமான பழங்குடியல்லாத மெய்தி இனத்தவர்களுக்கும், குக்கி பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கடந்த மே மாதம் வெடித்த வன்முறை, இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போது, வன்முறை அரங்கேறிய வண்ணமே இருக்கிறது.

இப்படியான சூழலில், பிரிவினைவாத, பயங்கரவாத, வன்முறைச் செயல்களுக்காக ஒன்பது மெய்தி ஆதரவு அமைப்புகளைத் தீவிரவாத அமைப்புகள் என அறிவித்து, நவம்பர் 13 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் அவற்றுக்குத் தடை விதித்தது. அந்தப் பட்டியலில், `மக்கள் விடுதலை ராணுவம் (PLA), அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA), மக்கள் காங்கிலிபாக்கின் புரட்சிகரக் கட்சி (PREPAK), அதன் ஆயுதப் பிரிவான ரெட் ஆர்மி (Red Army), காங்க்லிபாக் கம்யூனிஸ்ட் கட்சி (கேசிபி), அதன் ஆயுதப் பிரிவான ரெட் ஆர்மி (Red Army), காங்லி யாயோல் கன்பா லுப் (KYKL), ஒருங்கிணைப்பு கமிட்டி (CorCom), சோசலிச ஒற்றுமைக்கான கூட்டணி காங்கிலிபாக்கின் (ASUK) அனைத்து பிரிவுகள், முன்னணி அமைப்புகள்” ஆகியவை இடம்பெற்றிருந்தன.
நன்றி
Publisher: www.vikatan.com
