எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்:
ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விக்சித் பாரத் யாத்ரா பிரசார வாகன திட்டம் தொடங்கப்பட்டதால், இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனத் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை, சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் வரும் டிசம்பர் 5-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

பிரதமர் மோடியின் வேண்டுகோள்:
தேர்தல் நடைபெறாத மற்ற மாநிலங்களில் நடைபெறும் விக்சித் பாரத் யாத்ரா பிரசாரத் திட்டம் குறித்து நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது “விக்சித் பாரத்” பிரசாரம், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் ஒரு பகுதியாகும். எனவே, விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா-வின் மத்திய அரசின் திட்டங்களை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்தில், மத்திய அமைச்சர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
