இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. பலரும், இந்திய ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “இந்தியா தன்னுடைய விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோமல் ஆகியவற்றுக்குப் பெயர்போனது.
இருப்பினும், அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்தப்பட்ட விதம், ஏற்றுக்கொள்ள முடியாதது. விளையாட்டு என்பது நாடுகளுக்கிடையே `ஒருங்கிணைக்கும்’ சக்தியாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தை வளர்க்க அது பயன்பட வேண்டுமே தவிர, வெறுப்பைப் பரப்பும் கருவியாக அதைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
