புழல் சிறையில் இருக்கும் அமைச்சரை வெளியே கொண்டுவர தி.மு.க தரப்பு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், நீதிமன்றங்கள் ஜாமீன் தர தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்துக் கொண்டே இருப்பதோடு, அவரது நீதிமன்றக் காவலையும் ஜூன் மாதத்திலிருந்து இப்போதுவரை நீட்டித்துக் கொண்டே வருகிறது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அடிக்கடி செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல்போவதும், சிறை மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.

கடந்த அக்டோபர் 9-ம் தேதி உயர் ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட செந்தில் பாலாஜி, பரிசோதனை மேற்கொண்டுவிட்டு அன்றே சிறைக்குத் திரும்பினார்.

இந்த நிலையில் நவம்பர் 15-ம் தேதி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. இது குறித்து நம்மிடம் பேசிய செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் சிலர், “அமைச்சருக்கு நவம்பர் 14-ம் தேதி இரவு முதலே உடல்நிலை சீராக இல்லை. கழுத்து வலியும், முகுதுத்தண்டு வலியும் இருந்தது, நவம்பர் 15-ம் தேதி வாந்தி, மயக்கமும் ஏற்பட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com
