பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில், குக்கி பழங்குடியினத்துக்கும், பழங்குடியல்லாத மெய்தி இனத்துக்கும் இடையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இனக்கலவரம் நடந்துகொண்டிருக்கிறது. ஜூலையில், குக்கி இன பெண்கள் இருவர் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்படும் வீடியோ இணையத்தில் பரவி மணிப்பூர் விவகாரம் பெரிதளவில் வெடிக்கவே, மத்திய அரசு குழு அமைத்து விசாரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், கடந்த ஜூலையில் காணமால் இரண்டு மாணவர்கள், காட்டில் இறந்துகிடக்கும் புகைப்படங்கள் சனிக்கிழமையன்று இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு, மணிப்பூரில் பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கிறது என்றும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் இந்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், இந்தியா தரப்பிலிருந்து இதற்கு, மணிப்பூரில் நிலைமை அமைதியாக இருப்பதாகவும், அத்தகைய கருத்துகள் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், இந்தியாவின் இத்தகைய பதில் குறித்து கேட்கப்பட்டிருந்தது. அதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், “இந்தக் கருத்தை தனிப்பட்ட முறையில் நான் சொல்லவில்லை. செய்தித் தொடர்பாளரால் அது கூறப்பட்டது. இருப்பினும் அந்தக் கருத்து சரியானதா என்றால் என்னுடைய பதிலும் சரி தான்” என்றார்.

மேலும், மணிப்பூர் நிலைமை குறித்து பேசிய ஜெய்சங்கர், “புலம்பெயர்ந்தோர்களின் சீர்குலைவு தாக்கமும் மணிப்பூர் பிரச்னையின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன். ஆனால், அதற்கு முந்தைய நீண்ட வரலாற்றைக் கொண்ட பிரச்னைகளும் இருக்கின்றன. இருப்பினும் இன்றைக்கு அங்கு இயல்பு நிலை திரும்புவதற்கான வழியைக் கண்டறிய மாநில அரசு, மத்திய அரசு தரப்பில் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. வன்முறை சம்பவங்கள் நடக்காமல் இருக்க போதுமான சட்டம், ஒழுங்கு இருக்கிறது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
