நடிகர் மாரிமுத்து இயக்குநர், நடிகர் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வந்தவர். கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளியானது. மணிரத்னம், ராஜ்கிரண், எஸ்ஜே சூர்யா, வசந்த் உள்ளிட்டோருடன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். நடிகராகவும் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் வில்லன் கோஷ்டியில் இருந்தாலும் ரஜினியுடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகள் மாரிமுத்துவிற்கு இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வந்தார். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துள்ளார்.
இந்தப் படங்கள் கொடுத்த பிரபலத்தைவிட அதிகமான புகழை, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் பெற்று வந்தார் மாரிமுத்து. வில்லன் கேரக்டரையும் சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கொண்டாட வைக்க முடியும் என்பதற்கு மாரிமுத்துவும் முக்கியமான எடுத்துக்காட்டாக விளங்கினார். இப்படியான நிலையில், நேற்றைய தினம் காலமானார். இவரது இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தாலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாரிமுத்துவின் ஆரம்ப கால கஷ்டத்தை அறிந்து அவரின் மகன் படிப்பு செலவுக்கு உதவியது கூட அஜித் தான் என்பதை மாரிமுத்து, ஒரு பேட்டியில் கூட தெரிவித்திருக்கிறார். எதிர்நீச்சல் சீரியலில் முதலில் ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்தவர் இப்போது ரூ. 40 முதல் ரூ. 50 ஆயிரம் வரை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது கனவு இல்லத்தை ரூ.2 கோடி செலவு செய்து வாங்கியுள்ளார். ஒரு கார் ஒன்றை வைத்துள்ளார். இதை தவிர சில லட்சம் மட்டுமே இவரின் பேங்க பேலன்சில் உள்ளதாம்.
நன்றி
Publisher: 1newsnation.com